தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Live Updates
- 8 Oct 2024 7:58 AM
அரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க..
அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தன. பெரும்பாலான கணிப்புகளில், இரண்டு முறை ஆட்சியமைத்த பா.ஜ.க. இந்த முறை ஆட்சியை இழக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ.க.வு.க்கு சாதகமான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க. பயணிக்கிறது.
- 8 Oct 2024 7:54 AM
அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி
பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 5,909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு அரியானாவின் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
- 8 Oct 2024 7:22 AM
அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 5வது சுற்றில் 21,113 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 13,725 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,388 ஆகும்.
- 8 Oct 2024 7:14 AM
அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 11-வது சுற்றில் 50,617 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலையில் உள்ளார்.
- 8 Oct 2024 6:28 AM
அரியானாவில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
அரியானாவில் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் (49) பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். அம்பாலாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 8 Oct 2024 6:26 AM
அரியானா சட்டசபை தேர்தலில், உச்சன கலான் தொகுதியில் போட்டியிட்டுள்ள, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
அவர் வாக்கு எண்ணிக்கையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
- 8 Oct 2024 6:24 AM
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் (முன்னிலை நிலவரம்)
தேசிய மாநாட்டு கட்சி 42 பா.ஜ.க. 26 காங்கிரஸ் 9 மக்கள் ஜனநாயக கட்சி 3 ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 சுயேட்சைகள் 7 - 8 Oct 2024 5:39 AM
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் (முன்னிலை நிலவரம்)
தேசிய மாநாட்டு கட்சி 40 பா.ஜ.க. 27 காங்கிரஸ் 8 மக்கள் ஜனநாயக கட்சி 5 ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 சுயேட்சைகள் 7 - 8 Oct 2024 5:35 AM
அரியானா தேர்தல் முடிவுகள் (முன்னிலை)
பா.ஜ.க. 49 காங்கிரஸ் 35 இந்திய தேசிய லோக் தளம் 1 பகுஜன் சமாஜ் கட்சி 1 சுயேட்சைகள் 4 - 8 Oct 2024 5:35 AM
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில், இறுதி வெற்றி காங்கிரஸ்க்குதான். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இது சித்தாந்தத்தின் போராட்டம் என்றார்.