நுணுக்கமாக வேலை செய்யும் கன்னி ராசி அன்பர்களே!
சில காரியங்களில் தளர்வான போக்கு காணப்படும். அதிக முயற்சி செய்தால் அதிலும் வெற்றி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், வேலையில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினை உருவாகும். சிறிய குறைகளும் உயரதிகாரிகளுக்கு பெரிதாக தோன்றலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வரவேண்டிய பணத்தை வசூலிப்பதில் கவனம் செலுத்துவர். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும் லாபம் குறையாது. பணியாளர்களின் கோரிக்கைகளைக் கவனித்து சாதகமாக வேலைகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். பெண்கள் தங்கள் சிறு சேமிப்பில் இருந்து அவைகளைச் சமாளிக்கக் கூடும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற, சகக்கலைஞர்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்வர். பங்குச் சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.