6.10.2023 முதல் 12.10.2023 வரை
நுண்ணறிவுடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
பெரும்பாலான காரியங்களில் நிதானம் தேவை. நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். உறவினர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிதானமாகவும், பொறுமையாகவும் ஈடுபடவேண்டும். பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கவனமாக செயல்படுங்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நிலுவையை வசூலிப்பதில் தாமதம் ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் அதிக அக்கறை காட்டுவது அவசியமாகும். வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைத் துறையினர் வாய்ப்புகளைப் பெற சற்று முயற்சிகளை மேற்கொள்ளும்படி இருக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சந்திரனுக்கு மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்.