கொடுத்த வாக்கை காப்பாற்றும் கன்னி ராசி அன்பர்களே!
ஞாயிறு மாலை 4.27 மணி முதல் செவ்வாய் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பண வரவுகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் செல்லத் திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் அவசரமாகச் செய்த பணியொன்றில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரி சொல்லும் பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டியதிருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தொழிலில் நல்ல அனுபவம் உள்ள உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ளத் திட்டமிடலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களில் ஒருவர் மனவேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்லக்கூடும். அதிக மூலதனத்துடன் கூடிய கூட்டாளியை சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். கலைஞர்கள் தொழிலில் அதிக அக்கறையுடன் செயல்படுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றுங்கள்.