13-10-2023 முதல் 19-10-2023 வரை
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கன்னி ரராசி அன்பர்களே!
எடுத்துக் கொண்ட செயல்கள் சிலவற்றில் அதிக முயற்சியின் மூலம் வெற்றி பெறும் வாரம் இது. சில செயல்களில் தளர்வு ஏற்பட்டு மனதில் சுணக்கம் ஏற்படலாம். நண்பர்களின் உதவிகளைப் பெற முற்படுவீர்கள். உத்தியோகத்தில் வழக்கத்திற்கு மாறான வேலைப்பளுவால் அவதிப்படலாம். சக நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொந்தத் தொழிலில் வேலைகள் அதிகமாக கிடைத்தாலும், போதிய வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகமே. மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முன்னேற்றம் தடைபடும். கூட்டுத் தொழில் வழக்கம் போல் நடைபெறும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி எந்த முடிவையும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லை இருக்கும். உறவுகளில் மன வருத்தம் உண்டாகலாம். கலைஞர்கள், சுறுசுறுப்பாக இயங்கினாலும், வருமானம் திருப்தி தராது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு சிவப்பு வண்ண மலர் சூட்டுங்கள்.