27-10-2023 முதல் 2-11-2023 வரை
சுய நலன் கருதாது உதவும் கன்னி ராசி அன்பர்களே!
சனிக்கிழமை காலை 8.16 மணி முதல் திங்கள் பகல் 12.44 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானமான போக்கு அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் எதிர்பார்க்கும் காரியங்கள் நடைபெற இன்னும் சிறிது காலம் பொறுமையோடு இருக்க வேண்டும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவியாக தொழில் தெரிந்த நபரைத் தேர்ந்தெடுக்க முற்படுவீர்கள். வாடிக்கையாளர்களில் ஒருவர் உங்கள் திறமையைப் பாராட்டுவதோடு, புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப் படுத்தி உதவுவார். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடை பெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பலன் தருவதாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை சுமுக மாகத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கப்பெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.