உற்சாகத்துடன் பணிபுரியும் கன்னி ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த காரியங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சில காரியங்கள் வெற்றியடைய அதிக முயற்சி தேவைப்படலாம். முக்கியப் பணிகளை அதிக கவனத்துடன் செய்வது நன்மை தரும். நண்பர்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சியின் பேரில் சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சொந்தத் தொழிலில் பரபரப்பான சூழ்நிலை காணப்படும். அவசர வேலைகளைச் செய்ய ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், முன்னேற்றமான பலன்களை அடைவார்கள். வியாபார தலத்தை விரிவுபடுத்த கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.