05.05.2024 முதல் 11.5.2024 வரை
வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவு சுமூகமாக வந்து சேரும். ஏற்கனவே முயற்சித்த ஒப்பந்தங்கள் பணிகளில் உங்கள் கவனம் இருக்கட்டும். இது உங்களுக்கு நிறைந்த லாபத்தைத் தரும். நீண்ட கால திட்டங்களை வாரத்தின் அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். இதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். உங்களுடன் பழகியவர்களே உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். இது உங்கள் மனதில் சிலேக்கியத்தை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு காத்திருக்கும் இருவாளருக்கும் திருமணத்திற்கான முயற்சிகள் உண்டாகும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும்.