நேர்மையான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
திறமையோடும், தீவிர முயற்சியோடும் காரியங்களில் ஈடுபட்டு நல்ல பலன்களை அடைவீர்கள். தளர்ச்சி அடைந்த செயல்களில் தக்க நபர்களின் துணைகொண்டு முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு சில சலுகைகளைப் பெறுவீர்கள்.
சொந்தத் தொழில் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் பணியில் அதிக கவனம் செலுத்த நேரலாம். பணியில் சிறுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம், எதிர்பார்க்கும் லாபத்தோடு நடைபெறும். போட்டிகள் அதிகரிப்பதால், அதை முறியடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறு சிறு பிரச்சினைகளும் தலைகாட்டும். கலைஞர்கள் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரம், சுமாரான லாபத்தைத் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.