ஜோதிடத்தில் ஈடுபாடு மிகுந்த கன்னி ராசி அன்பர்களே!
நண்பர்களின் உதவியால் எடுத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வந்தாலும், செலவுகள் காத்துக் கொண்டிருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகளை சந்திக்க, உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற முயற்சிப்பீர்கள். எதிர்பார்க்கும் கடன் தொகை கைக்கு வந்து, நின்று போன பணிகளைத் தொடங்குவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளை சுலபமாக முடிக்க, புதிய முறைகளைக் கையாளுவா். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடுகளை அதிகமாக்கி, புதிய தொழில் தொடங்க முன்வருவீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். தொல்லை தரும் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் உழைத்து முன்னேறுவர். பங்குச்சந்தை முன்னேற்றம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.