29.9.2023 முதல் 5.10.2023 வரை
உழைப்பால் உயரும் கன்னி ராசி அன்பர்களே!
ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு தினங்கள் சந்திராஷ்டமம் உள்ளதால், தளர்வடைந்த செயல்களை வெற்றிகரமாக முடிக்க தகுந்த நபர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். சகப் பணியாளர்கள் பற்றிய வீண் பேச்சுகளால் பிரச்சினைகள் உருவாகும். சொந்தத் தொழிலில், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த அதிக காலம் உழைக்க நேரிடும். புதிய நபர் ஒருவரால் தொழில் ரீதியான முன்னேற்றம் உருவாகலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள், சுமாரான லாபம் பெறக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவினாலும், சிறுசிறு தொல்லையும் வந்துபோகும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்பர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.