நண்பர்களை அரவணைக்கும் கன்னி ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை பகல் 2.01 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், உங்கள் பணிகளில் தீவிரமாக முயற்சி செய்தாலும், சிலவற்றில்தான் வெற்றி கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. பிற மொழி பேசும் நண்பர் ஒருவர் ஆதரவாக இருப்பார். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருங்கள். எதிர்பார்க்கும் சலுகைகள் தள்ளிப் போகலாம். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். வாடிக்கையாளர் ஒருவரின் அவசரத் தேவைக்காக ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபட நேரிடும். கூட்டுத்தொழில் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றாலும் வழக்கமான லாபமே காணப்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்துபோகும். கலைஞர்கள் தீவிர முயற்சியின் பேரில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்காதேவிக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்குங்கள்.