உயர்வான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
தக்க நபர்களின் உதவியோடு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணவரவுகள் நினைத்தபடி கிடைத்தாலும் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியக் குறையால் முயற்சிகள் தடைபட்டுப் போகலாம். உத்தியோகஸ்தர்கள், முயற்சியின் பேரில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவர். அலுவலகம் பற்றிய வீண் பேச்சுகளால் தொல்லைகள் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய நபர்கள் மூலம் அதிக வேலைகளும், பொருள் வரவும் ஏற்படும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், தொழில் விருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்பட்டாலும் சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது. பங்குச்சந்தையில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை பலன் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.