கன்னி - வார பலன்கள்

Update: 2023-01-19 19:56 GMT

நேர்மையான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

பல நல்ல பலன்கள் கிடைத்தாலும், சில சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும். தொழில் துறையினர் தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படலாம். அவ்வாறு கிடைத்தவர்கள் அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். ஒரு சிலருக்கு மாறுதலால் நன்மைகளும் கிடைக்கலாம். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது அவசியம். ஒரு சிலர் மனதுக்கு பிடித்தமானவர்களின் கோபத்துக்கு ஆளாகலாம்.

வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால், லாபம் பற்றி கவலைப்பட வேண்டாம். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் குடும்ப விஷயங்களில் சாமர்த்தியமாக செயல்படுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பொறுப்பான பதவி கிடைக்கலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால், வாழ்வில் நலம் பெறலாம்.

மேலும் செய்திகள்