கடினமான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே!
தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். வழக்கமான பொறுமையால் அதை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். சக ஊழியர்களுடன் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்தத் தொழில் லாபம் தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் குறையாது. பணத்தை கையாளும்போது அதிக கவனம் தேவை. புதிய பங்குகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளால் உற்சாகமாக செயல்படுவார்கள். சகக்கலைஞர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. விலகிய சொந்தங்கள் தேடி வரும்.
பரிகாரம்:- சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.