நீதி நெறிகளில் பற்றுதல் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
திங்கள் முதல் புதன்கிழமை காலை 8.54 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானமான போக்கை கடைப்பிடிப்பது நல்லது. எளிதாக முடிக்கலாம் என்று கருதிய வேலையை, அதிக முயற்சியின் மூலம் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக நண்பர் பணியையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அவசர காரியங்களை முடிப்பதற்காக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டியது இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. கலைஞர்கள், கடினமான பணிகளில் கலந்துகொள்ளும்போது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சொத்துப் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
பரிகாரம்:- மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்தால் வாழ்வில் நலம் கிட்டும்.