உத்திரம் 2,3,4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதங்கள்
காரியங்களை எளிதாகச் செய்யும் கன்னி ராசி அன்பர்களே!
தளர்வடைந்த செயல்களை வெற்றிகரமாக முடிக்க, தகுந்த நபர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். சொந்தத்தொழிலில், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த அதிக காலம் உழைக்க நேரிடும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், சுமாரான லாபம் பெறக்கூடும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் வழக்கமான லாபத்திற்கு குறை இருக்காது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வரையில், பழைய பணிகளிலேயே கவனம் செலுத்துவது நல்லது. சகக்கலைஞர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறு சிறு தொல்லைகளையும் சந்திக்க நோிடும். பெண்களுக்கு உறவு வழியில் நன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
பரிகாரம்:- சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்துசேரும்.