உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்
இனிப்பாக பேசும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
தள்ளிப் போட்டிருந்த காரியங்களை, நேரடியாகச் சென்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், அவசரமான பணிஒன்றை மேற்கொள்வீர்கள். வீண் விவாதங்களால் பிரச்சினைகள் உண்டாகலாம். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலாத நிலை ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இருந்தாலும், அலுவலக சம்பந்தமான செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்றாலும், சகக் கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் அவை தள்ளிப்போகலாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். சுபகாரியங்களில் சிறுதடை ஏற்படலாம். நண்பர்களிடத்திலும் உறவினரிடத்திலும் இனிமையாகப் பேசுவது நன்மை தரும்.
பரிகாரம்: துர்க்காதேவிக்கு வெள்ளிக்கிழமை அன்று அரளிப்பூ மாலை சூட்டி வழிபட்டால் நற்பலன் தரும்.