கன்னி - வார பலன்கள்

Update: 2022-10-13 20:24 GMT

இந்த வாரம் தனவரவுகள் தேவையான அளவு இருந்தாலும், அதிகமான செலவுகள் ஏற்படும். உறவுகளால் சிறு சலசலப்பு ஏற்பட்டு அடங்கும். முக்கியமானவர்களின் சந்திப்பு ஆதாயம் தரும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. அதிக அலைச்சலை சந்திக்கக்கூடும். பணப் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருப்பது அவசியம். சொந்தத்தொழிலில் நெருக்கடி இருக்கும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் கூட்டாளி களின் ஆலோசனையை அவ்வப்போது பெற வேண்டியிருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு ஆதாயம் இல்லாமல் போகலாம். பங்குச்சந்தை வியாபாரிகள் லாபம் பெற சிறிது காலம் பொறுமையாக இருப்பது அவசியம். இந்த வாரம் ஆஞ்சநேயரை சனிக்கிழமை வழிபாடு செய்து, ஸ்ரீராமஜெயம் எழுதினால் தடைகள் நீக்கி நன்மை கிடைக்கும்.

மேலும் செய்திகள்