எந்த காரியமாக இருந்தாலும் அதனை நிதானமாகச் செய்யுங்கள். உத்தியோகஸ்தர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தொழில் செய்பவர்கள், முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் அமைதி நிலவினாலும், பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரகத்தில் உள்ள அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.