சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம் இது. பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தொழில் செய்பவர்கள், வேலைகளை விரைவாகச் செய்ய நவீனக் கருவிகளை பயன்படுத்துவர். குடும்பத்தினர் குலதெய்வ கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புண்டு. புதிய கடன் வாங்கும் நிலை வரலாம். இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.