மற்றவரை எடைபோடத் தெரிந்த கன்னி ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொந்தத்தொழிலில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவர். தயாரிப்புப் பணியில் உள்ள இயந்திரங்களை பழுதுநீக்கும் பணியை மேற்கொள்வீர்கள்.
கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் வந்துசேரும். மூலதனத்தை அதிகப்படுத்தி முன்னுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் சேர்ந்திருக்கும். கடன்கள் இருந்தாலும், அவற்றால் தொல்லை வந்து சேராது. நண்பர்கள் தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். சுபகாரியங்களை நடத்துவதற்கான முயற்சியை செய்வீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளால் உற்சாகம் அடைவர். பங்குச்சந்தை லாபம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.