நீதிநெறிகளில் நம்பிக்கை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
வரவேண்டிய சலுகைகள் தள்ளிப்போகும். அவசியமான வேலையாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். புதிய உறவுகள் தேடிவரும். பகை உணர்ச்சி மாறும். பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றங்கள் நேரக்கூடும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் ஏற்படும். மேலதிகாரிகள் அனுகூலமாக இருப்பார்கள். சொந்தத்தொழிலில் ஏற்றமான போக்கு காணப்படும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். ஆனாலும் போட்டியாளர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியதிருக்கும். கூட்டாளிகளுடன் கலந்தாலோசிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியும், உற்சாகமும் ஏற்படும். பெண்கள் சிறுசிறு பிரச்சினைகளை சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்பு பெறுவர். பங்குச்சந்தை லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துா்க்கைக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றுங்கள்.