தனுசு - வார பலன்கள்

Update:2023-06-23 02:27 IST

தலைமை பொறுப்பை திறம்பட நடத்தும் தனுசு ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்கள் எதிர்பாராத வெற்றிகளை அடையும். சிலர் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். சோம்பல், சோர்வு அகன்று சுறுசுறுப்பாகச் செயலாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாகச் சமாளிப்பீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறலாம். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல ஏற்றம் காண்பர். மனதில் உற்சாகமும், நிம்மதியும் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து நிலுவைத் தொகை வசூலாகும். கடன் பிரச்சினைகள் தீரும். கூட்டுத்தொழில் நன்கு நடைபெறும். குடும்பத்தில் தோன்றும் பிரச்சினையை சமாளிப்பீர்கள்.

பரிகாரம்:- இந்தவாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றியும், மலர் மாலை சூட்டியும் வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்