13-10-2023 முதல் 19-10-2023 வரை
தர்ம சிந்தனை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் முயற்சிக்கு உறு துணையாக இருப்பார்கள். முக்கிய ஆன்மிக நிகழ்ச்சிக்குப் பண உதவி செய்யும் சந்தர்ப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் ஏற்படலாம். அவர் மூலம் புதிய வேலைகளும், வருமானமும் கிடைக்கும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். தொழில் வளர்ச்சியில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். மகன் அல்லது மகளின் புதிய வேலையால் பண வரவு அதிகமாகும். கலைஞர்கள் பிரபல நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் மகிழ்வுடன் பணியாற்றுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபடுங்கள்.