தனுசு - வார பலன்கள்

Update:2023-10-06 01:03 IST

6.10.2023 முதல் 12.10.2023 வரை

பிறருக்கு உதவும் ஆர்வம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

ஞாயிறு முதல் செவ்வாய் காலை 8.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அலைச்சல் அதிகரிக்கலாம். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய திருப்பம் காணலாம். அவசரம் காரணமாக கூடுதல் வேலைப்பளுவை எதிர்கொள்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெற்று மகிழக்கூடும். வாடிக்கையாளரின் திருப்திக்காக ஓய்வின்றி பணியாற்றுவீர்கள்.

கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியான தேக்க நிலை அகன்று சுறுசுறுப்பு ஏற்படும். முதலீடுகளை அதிகரிக்க முற்படுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கலைஞர்கள் தொழில் சம்பந்தமான ஆலோசனைகளில் கவனம் செலுத்த நேரலாம்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்