தனுசு - வார பலன்கள்

Update:2023-09-22 01:33 IST

கலைகளில் ஈடுபாடு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெற, அதிக முயற்சி தேவைப்படும். தகுந்த நபர் இல்லாத காரணத்தால், சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் நன்மைகள் நடைபெற சிறிது பொறுமையோடு இருப்பது நல்லது. நிறுத்தி வைத்த வேலைகளை முடிக்க உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கக் கூடும்.

சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள், பழைய வாடிக்கையாளருக்கு புதிய வேலைகளை விரைவாகச் செய்து கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகலாம். பங்குதாரர்களின் அனுகூலத்தால் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்திற்கு நலம் தரும் செய்திகள் வந்துசேரும். கடன்கள் அடைபட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சிரமங்கள் உண்டாகலாம். கலைஞர்கள், தொழிலில் வளம் காண நண்பர்களின் மூலம் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சன பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்