27-10-2023 முதல் 2-11-2023 வரை
உற்சாகமாக வலம் வரும் தனுசு ராசி அன்பர்களே!
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த தன வரவுகள் தாமதப்பட்டாலும், கொடுக்க வேண்டியவர்களுக்குக் கடன் வாங்கியாவது கொடுத்து நாணயத்தை காப்பாற்றுவீர்கள். கடினமான பணி செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்களிடம் உள்ள பதிவேடுகளைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் சோதனைகளை சமாளித்து வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பணிகளைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் வியாபாரம் சுமாராக இருக்கும். கூட்டாளிகளுடன் வியாபார முன்னேற்றம் பற்றி அடிக்கடி ஆலோசனை நடத்த நேரிடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலைகாட்டும். கலைஞர்கள் புதிய வாய்ப்பு களைப் பெற்றாலும், போதிய வருமானம் இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை சாற்றுங்கள்.