தனுசு - வார பலன்கள்

Update:2023-08-25 01:10 IST

செயல்களை நுட்பமுடன் செய்யும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் பேச்சாற்றலால் நிறைவடையாத காரியங்களை, தீவிர முயற்சியால் முடிப்பீர்கள். பண வரவுகள் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளை சந்திக்கும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். தள்ளி வைத்த வேலை ஒன்றை, அதிகாரியின் உத்தரவால் உடனடியாகச் செய்வீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணிகளில் உற்சாகம் காட்டினாலும், குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்க இயலாது. புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்