தலைமை பண்பு நிறைந்த தனுசு ராசி அன்பர்களே!
முக்கியமான காரியங்களில் அதிக முயற்சியோடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சில செயல்களில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் உண்டாவதில் தடை வரும். முக்கிய நபரின் அறிமுகம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்துசேரும். அலுவலகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த கடன்கள் கைக்குக் கிடைத்து, நின்று போய் இருந்த வேலைகளைத் தொடருவீர்கள்.
சொந்தத் தொழிலில் புதிய நபர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் நன்றாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கலாம். புதிய கிளை தொடங்க கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். கடன் தொல்லை நீங்கும். கலைஞர்கள் பிரபல நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.