29.9.2023 முதல் 5.10.2023 வரை
தர்மம் செய்து மகிழும் தனுசு ராசி அன்பர்களே!
நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் தளர்ச்சி ஏற்பட்டாலும் உறுதியோடு முயன்று வெற்றிபெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சகப் பணியாளர்களின் ஆதரவு இருக்கும். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தமும், பணமும் கிடைத்து மகிழ்வேற்படலாம். ஓய்வின்றி பணிசெய்து வாடிக்கையாளர்களது தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக்கூடும். முதலீடுகளை அதிகப்படுத்தவும், புதிய துணைத் தொழில் தொடங்கவும் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்குவீர்கள். கலைஞர்கள், பிரபல ஒப்பந்தங்களைப் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை சுக்ரனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.