தெய்வீக சிந்தனைமிக்க தனுசு ராசி அன்பர்களே!
செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், அவைகளை தீவிர முயற்சியோடு தகர்த்து எறிவீர்கள். இருப்பினும் சில காரியங்களை கொஞ்சம் தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். சிறிய தவறும் உயர் அதிகாரிகளின் பார்வையில் பெரிதாகக் காணப்படும். ஆதலால் பொறுப்புகளில் கவனமாக இருப்பது அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் பணிகளில் நிதானத்தோடு செயல்படாவிட்டால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் வாங்க இயலாது. கூட்டுத்தொழில் புரிபவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வியாபார வளர்ச்சி காண முடியும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.