தனுசு - வார பலன்கள்

Update:2023-06-16 01:24 IST

உற்சாகத்துடன் பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

செவ்வாய் மாலை 4.09 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் தேவையான போது கிடைக்காமல் போகலாம். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, அதிக வருமானத்துடன் வேறு வேலை கிடைக்கலாம். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய நபர்களின் அவசரப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கூட்டுத் தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் கடன் தொல்லை இருந்தாலும், பெரிய பாதிப்பை உண்டாக்காது. பெண்கள் ஆடை அலங்காரப் பொருள் வாங்கி சேர்ப்பார்கள். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தாலும் கூடுதல் வருமானம் இருக்காது. பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் தள்ளிப்போகும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்