எல்லோரையும் சமமாக கருதும் தனுசு ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்கள் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெறும். வர வேண்டியவை தாமதமின்றி கிடைக்கும். வீடு அல்லது மனை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறுவர். சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சகப் பணியாளர்களுடன் சுமுகமாக உறவாடுங்கள்.
சொந்தத் தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் வேலைச் சுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெறும். கூட்டாளிகளின் ஆலோசனைப்படி புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ளலாம். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உறவுகளிடம் ஏற்படும் பிரச்சினைகளை சுமுகமாக தவிர்ப்பீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பங்குச்சந்தை ஏற்றம் தருவதாக அமையும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.