முன்னேற்றமான செயலை செய்யும் தனுசு ராசி அன்பர்களே!
எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். யாருக்காவது வாக்குறுதி கொடுப்பது அல்லது ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், பொருளாதார விஷயத்தில் ஓரளவு திருப்தி காண்பர். பங்குச்சந்தையில் ஈடுபட்டு தளர்ச்சி கண்டோர், மீண்டும் முதலீடு செய்ய அவசரம் காட்டாதீர்கள். பொறுமையை கடைப்பிடித்தால் சுகவாழ்வுக்கு வழி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு உண்டாகும். பணிகளை சரிவர செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
பொருளாதார நிலை சற்று கடினமாக இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இந்த தருணத்தில் வரும் என்பதால், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். எதிலும் நிதானம் தேவை.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை விநாயகருக்கு அருகம்புல் சாத்தி, சிதறுகாய் உடைத்து வழிபடுங்கள்.