தனுசு - வார பலன்கள்

Update:2023-05-19 01:29 IST

உள்ளத்தில் உறுதி கொண்டதனுசு ராசி அன்பர்களே!

புதன் காலை 8.43 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க சிறிது காலம் பொறுமையாய் இருப்பது அவசியம். திட்டமிட்ட பண வரவுகளும், காரணமில்லாமல் தள்ளிப்போகும். உங்கள் இல்லம் தேடி நல்ல செய்திகள் வரக்கூடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உயர் அதிகாரியின் விருப்பப்படி அவசரமான வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வேலையை விரைவில் செய்து முடிக்க நவீன கருவிகளைப் பயன்படுத்துவீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் சுமாராக நடைபெறும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு தொல்லைகள் தலைகாட்டும். பணப் பிரச்சினையை சமாளித்து விடுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள்.

மேலும் செய்திகள்