தனுசு - வார பலன்கள்

Update:2023-05-05 01:40 IST

சிறந்த சிந்தனை வளம் நிறைந்ததனுசு ராசி அன்பர்களே!

காரியங்கள் பலவற்றில் அதிக முயற்சியுடன் செயலாற்றி சிறந்த வெற்றிகளைப் பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்தில் பொறுப்பும், செல்வாக்கும் கிடைக்கலாம். நிறுத்தி வைத்திருந்த வேலையை உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிகப் பணிகளால் அல்லல்படுவர். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதிக வருமானமுள்ள ஒப்பந்தங்கள் வந்துசேரும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகம் மூலம் பணவரவுகள் ஏற்படும். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தம் பெறக்கூடும். பங்குச்சந்தை முதலீடு அதிகமாகும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்