தனுசு - வார பலன்கள்

Update:2023-04-28 02:07 IST

கற்பனையும், எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் சனி பகல் 1.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களில் கவனம் தேவை. வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் ஏற்படும் சிறு தவறுகளும், உயரதிகாரிகளுக்குப் பெரிதாகத் தோன்றக்கூடும். எதிர்பார்க்கும் கடன் வரவுகள் தள்ளிப் போகலாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் அல்லல்பட நேரலாம். கூட்டு வியாபாரம் எதிர்பார்க்கும் லாபம் தருவதாக இருக்கும். விலைவாசி ஏற்றத் தாழ்வால் வியாபாரத்தில் சிறிது சரிவு ஏற்படக்கூடும். சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், குடும்பம் சீராக நடைபெறும். குடும்பத்தில் சிலருக்கு ஆரோக்கியக்குறை ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். இருப்பினும் போதிய வருமானம் கிடைக்காது. பங்குச்சந்தையில் வழக்கமான லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.

மேலும் செய்திகள்