கற்பனையும், கருத்தும் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் சில செயல்களில் வெற்றிபெற தகுந்த நபர்களின் உதவியை நாடுவீர்கள். வரவேண்டிய வரவுகள் சிறிது தள்ளிப்போகலாம். கடன் பிரச்சினையால் கவலை வந்து சேரும். குடும்ப உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பொறுப்பு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். செய்யும் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்தில் உரியவரிடம் கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டு வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கலாம். கலைஞர்கள், சக நண்பர்கள் மூலம், பிரபல நிறுவன ஒப்பந்தத்தைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை துர்க்கை அம்மனுக்கு, வெண்மையான மலர் மாலை சூட்டி நெய் தீபமிடுங்கள்.