தனுசு - வார பலன்கள்

Update:2023-04-07 01:38 IST

துன்பம் மறந்து இன்முகத்தோடு பழகும் தனுசு ராசி அன்பர்களே!

செய்யும் வேலைகள் பலவற்றில் வெற்றிகளை அடைவீர்கள். பண வசதிகள் திருப்தி தருவதாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த முக்கிய தகவல் வந்து சேரலாம். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். சொந்தத்தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமும், அவரால் தொழில் ரீதியான முன்னேற்றமும் ஏற்படலாம். பண வசதிகள் தேவையான அளவு இருக்கும். நீண்ட காலம் வராத கடன் வசூலாகும். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய கிளைகளைத் தொடங்கும் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். கடன் தொல்லைகள் தீரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் சரியாகும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, குரு பகவானுக்கு மஞ்சள் நிற மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.

மேலும் செய்திகள்