எச்சரிக்கையாக செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் இருப்பதால், கொடுக்கல் - வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் செயல்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வரவை விட செலவு அதிகமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்யவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அவசர வேலைகள் வந்து சேரலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிலுவையை வசூலிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் சீரானப்போக்கு காணப்படும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். சுப நிகழ்வுகளில் பங்கேற்கும் பெண்கள், வீண் பேச்சுகளால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தம் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து, நெய் தீபமும் ஏற்றுங்கள்.