தனுசு - வார பலன்கள்

Update:2023-03-17 01:25 IST

தருமம் செய்வதில் ஈடுபாடு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

பணவரவு அதிகரித்தாலும், கடன் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. முன்யோசனையோடு செயல்பட்டு, தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அரசுத் துறையினருக்கு சலுகைகள் தேடி வரும்.

கலைத்துறையினருக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத பெரிய நிறுவன ஒப்பந்தங்களால் திக்குமுக்காடிப் போவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட தொல்லையை அலட்சியம் செய்ய வேண்டாம்.

சகோதரிகள் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். புதிய காரியங்களை முயற்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அடுத்தவர்களின் தலையீட்டால் தடைப்பட்டு நின்ற கபகாரியங்கள் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் கைகூடலாம். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

மேலும் செய்திகள்