பிறர் பாராட்டும்படி பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பிரச்சினைகள் பெரிதாகத் தோன்றினாலும், வந்த வேகத்தில் அவை உங்களை விட்டு விலகிவிடும். உத்தியோகஸ்தர்களில் யாராவது, இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றுக்கு விண்ணப்பித்திருந்தால், பல தடைகளுக்குப் பிறகே அவை கிடைக்கும். அதற்காக உங்களுடைய முயற்சிகளை விட்டு விடாதீர்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் ஓரளவு திருப்தி காண்பார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வாரத் தொடக்கத்தில் மந்த நிலை காணப்பட்டாலும், அதன்பிறகு நல்ல லாபம் கிடைக்கப்பெறும். கலைஞர்களின் தொடர் முயற்சிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே இணக்கம் ஏற்படும். எதிர்வரும் பிரச்சினைகளை நிதானமாக கடந்துசெல்லுங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.