தனுசு - வார பலன்கள்

Update:2023-03-03 01:40 IST

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

இனிய சுபாவத்துடன் பழகும் தனுசு ராசி அன்பர்களே!

வெள்ளி பகல் 11.130 முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு வரை சந்திராஷ்டமம் உள்ளதால், செய்யும் காரியங்களில் சிறுசிறு தாமதங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

சொந்தத் தொழிலில் இருந்து வந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் திறமையால் வாடிக்கையாளர்களை கவருவீர்கள். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. பங்குச்சந்தையில் நல்ல லாபம் தென்பட்டாலும், அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணவரவும், புகழும் ஒருங்கே கிடைக்கும்.

குடும்பத்தில் மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். மகன் அல்லது மகளின் திருமண விஷயமாக எடுத்த முயற்சிகள் நல்ல திருப்பத்தைச் சந்திக்கக் கூடிய காலம் இது.

பரிகாரம்:- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டால் வளம் சேரும்.

மேலும் செய்திகள்