தனுசு - வார பலன்கள்

Update:2023-02-17 01:28 IST

உறுதியான எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சிலருக்கு தடைபட்ட திருமண பேச்சு மீண்டும் தொடங்கும். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நீண்ட கால பிரச்சினை ஒன்று முடிவுக்கு வராமல் இழுபறி நிலையிலேயே இருக்கும். குடும்பத்தில் வயதானவர்களால் மருத்துவச் செலவு உண்டு. கணவன்- மனைவி உறவில் சுமுகமான நிலை காணப்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு சில பிரச்சினைகளால் உங்கள் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, கோபம் அதிகரிக்கும். இருப்பினும் எந்த நிலையிலும் நிதானத்தை கைவிட்டு விடாதீர்கள். செலவுகள் கட்டுக்குள் அடங்காமல் போகக்கூடும். பொதுவாக உங்கள் செயல்திறனை குறைக்கக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம். வீடு, பூமி போன்றவற்றை அவசரப்பட்டு விற்கவோ, வாங்கவோ வேண்டாம். வாகன மாற்றத்தை தள்ளிப்போடுங்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்