தனுசு - வார பலன்கள்

Update:2023-02-03 01:18 IST

கலையழகுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

சனி முதல் திங்கள் பகல் 3.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. பல காரியங்களில் முயற்சியோடு செயல்பட்டாலும், சிலவற்றில் மட்டுமே முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பணிச்சுமை அதிகரிக்கும். சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய நேரிடும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நீண்ட காலம் நிலுவையில் இருந்த தொகை வசூலாகும். கூட்டுத்தொழிலில், கூட்டாளி ஒருவர் விலகி புதிய தொழில் தொடங்கலாம். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெற்றாலும், எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பழைய பகை மறையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்துசேரும்.

வழிபாடு:- செய்வாய்க்கிழமை அன்று துர்க்கைக்கு, நெய் தீபமிட்டு வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.

மேலும் செய்திகள்