தனுசு - வார பலன்கள்

Update:2023-01-27 01:23 IST

தர்மத்தில் பற்று கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

மற்றவர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும், சில காரியங்களில் பின்னடைவு ஏற்படத்தான் செய்யும். உத்தியோகத்தில் சிலருக்கு, உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய நபரின் வேலையை உடனே செய்து கொடுக்க நேரிடும்.

சொந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவீர்கள். கொடுக்கல், வாங்கலைச் சரி செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் சீரானப் போக்கு காணப்படும். பெண்களின் சேமிப்பு கரையும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் பங்கு கொள்ள வெளியூர் செல்ல நேரலாம். பண வரவுகள் அதிகமாகும். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறிது முன்னேற்றம் காணக்கூடும்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை துர்க்காதேவிக்கு, செவ்வரளி மாலை சூட்டி வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்