30.12.2022 முதல் 5.1.2023 வரை
கருத்தால் மற்றவர்களைக் கவரும் தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சியால் எதிர்பாராத காரியம் ஒன்று திடீரென நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கலாம். வீடு, நிலம், தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் காணப்படாது. கூட்டுத் தொழிலிலும் போதிய வருமானம் கிடைக்காது. குடும்பம் அமைதியாக இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகளும் தலைதூக்கும். கடன்காரர்களின் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். பெண்கள் சகோதர வழி உறவுகளில் பழகும்போது பேச்சில் இனிமை கலந்து பேசுவது அவசியம். கலைஞர்கள் தீவிர முயற்சியின் மூலம், புதிய வாய்ப்புகளைப் பெறுவர். பங்குச்சந்தையில் சுமாரான லாபமே கிடைக்கக்கூடும்.
பரிகாரம்:- புதன்கிழமை அன்று நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.