தனுசு - வார பலன்கள்

Update:2022-12-09 02:01 IST

கனிவாகப் பேசும் மனம் படைத்த தனுசு ராசி அன்பர்களே!

ஞாயிறு பகல் 1.32 மணி முதல் செவ்வாய் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, மகிழ்வு தரும்.

தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். மூலப்பொருட்களை வாங்கி சேமித்து வைப்பது நல்லது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வர். இருப்பினும் பழைய வாய்ப்புகளால் வருமானமும் உண்டு.

மாணவர்கள் வரவேற்கத்தக்க அளவுக்கு படிப்பில் ஈடுபாடு காட்டுவர். எல்லாப் பிரச்சினைகளிலும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் - மனைவி இடையே கருத்து ஒற்றுமை நிலவும். உறவினர் வருகையால் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய தரிசனம் செய்யும் பாக்கியம் பெறுவீா்கள்.

பரிகாரம்:- சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்கினால் நன்மைகள் பெருகும்.

மேலும் செய்திகள்