தனுசு - வார பலன்கள்

Update:2022-11-25 01:22 IST

கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

இந்த வாரம் அதிக நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் பல சலுகைகளைப் பெறுவீர்கள்.

தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் சுமாரான முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மூலப்பொருட்களை அதிக அளவில் இருப்பு வைப்பதை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்வார்கள். ஆனால் அதற்கேற்ற வருமானம் இருக்குமா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். மனைவி வழி உறவுகளால் மனக்கசப்பு ஏற்படலாம். பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டால் இடையூறுகள் விலகும்.

மேலும் செய்திகள்